ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கனமழை: நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அரசு நிவாரணத்தை எதிர்நோக்கும் விவசாயிகள்

செய்யாறு,டிச.4: திருவண்ணமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. பல வயல்களில் நெற்பயிர்களில் நாற்று முளைத்துள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:08 am

தே.சாலமன்

செய்யாறு,டிச.4: திருவண்ணமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

பல வயல்களில் நெற்பயிர்களில் நாற்று முளைத்துள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நிவாரணத்துக்காக வருவாய்த் துறையில் முறையீடு செய்துள்ளனர்.

நெல் விளைச்சலில் தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக செய்யாறு வட்டத்தில் நெல் சாகுபடி அதிகம். மாவட்டத்தில் இயல்பான சாகுபடி பரப்பளவு 80 ஆயிரம் ஹெக்டேர்.

அதிக விளைச்சல் தரும் நவரைப் பருவத்தில் விவசாயிகள் 100 சதவீதம் நெல் பயிரிடுவர். தற்போது சம்பா பருவம் என்பதால் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிட்டுள்ளனர்.

எதிர்பாராத வகையில், கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையாலும், குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தொடர்ந்து பெய்யும் மழையாலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.பல இடங்களில் மூழ்கிய நெற்பயிர்களில் இருந்து நாற்று முளைத்துள்ளது.

 செய்யாறு வட்டத்தில் வாக்கடை, முக்கூர், திருமணி, பாராசூர், தூசி, மாமண்டூர், வெம்பாக்கம், வெங்களத்தூர், உமையாள்புரம், பிரம்மதேசம், நாட்டேரி, அருகாவூர், தண்டரை ஆகிய பகுதிகளில் 3,500 ஏக்கர் நிலங்களும், ஆரணி வட்டத்தில் ஆதனூர், காமக்கூர், புதுப்பாளையம், ஆகாரம், விண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர், பனையூர், அக்ராபாளையம், நெசல் ஆகிய பகுதிகளிலும் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், வந்தவாசி வட்டத்தில் ஆயிரமங்கலம்,வெண்குண்றம், சாலவேடு, கீழ்நர்மா, மருதாடு, கல்லாங்குத்து, காவேரிப்பாக்கம், பாதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பெருமளவு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெற் பயிர்களுக்கு நஷ்டஈடாக ஏக்கருக்கு 15 ஆயிரம் வழங்கக் கோரி அனைத்து விவசாய சங்கத்தினரும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் இருதினங்களாக ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.