மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழ் வழிக் கல்விக்கும் ஊக்கம் தேவை!

வேலூர், மே 21: தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருந்தாலும், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளே மாநில அளவில் முதல் 3 இடங்களையும் பிடித்து, அரசின் இலவச உயர் கல்விச் சலுகையைப் பெறுகின்றனர். எனவே, தமிழ்

Updated On :20 செப்டம்பர் 2012, 2:28 pm

வேலூர், மே 21: தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருந்தாலும், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளே மாநில அளவில் முதல் 3 இடங்களையும் பிடித்து, அரசின் இலவச உயர் கல்விச் சலுகையைப் பெறுகின்றனர்.

எனவே, தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் இதுபோன்ற சலுகைகளைத் தனியே அறிவித்து ஊக்கப்படுத்தினால்தான், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் பாடத்தைப் படிப்போரே தமிழகத்தில் கெüரவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்த பிறகு, "தமிழை ஒரு பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவர்களில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போர் பட்டியல் தயாரிக்கப்படும்' என 2007 நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிப்பை வெளியிட்டது.

அதே ஆண்டு, இந்த முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ-மாணவிகளின்உயர் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதுதவிர, சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

2007-ம் ஆண்டு இப்படி ஒரு அறிவிப்பு வெளியானபோதே, தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். மொத்த மாணவர்கள் விகிதத்தில் 20 சதவீதம் மட்டுமே இருக்கும் மெட்ரிக் பள்ளி மாணவர்களே முதல் 3 இடங்களையும் பிடித்து, அரசின் சலுகையை அனுபவிக்கும் அதே நேரத்தில், தமிழ் வழியில் படிக்கும் 80 சதவீத மாணவர்களும் இந்த சலுகையை அனுபவிக்க முடியாமல் போனது.

மேலும், மெட்ரிக் பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதால், கட்டணம் அதிகமாக இருந்தாலும், அப்பள்ளிகளை நாடும் போக்கு நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகம் இருக்கிறது. இதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல.

ஆனால், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 99 சதவீதம் பேர் நடுத்தரத்துக்கும் கீழ் உள்ள மக்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து, தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாலும், உயர்கல்வி பயில்வது என்பது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. இதனாலேயே பலர் பொறியியல், மருத்துவம் பயில்வதிலிருந்து விலகி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிற வழிக் கல்வியில் பயின்று, சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரசு இதுபோன்ற சலுகைகள் வழங்குவதில் தவறில்லை; அதே நேரத்தில், தமிழ் வழிக் கல்விக்கும் முக்கியத்தும் அளித்தாலே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும்.

மாவட்ட அளவில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கும் இச் சலுகையை அரசு நீட்டித்திருக்கிறது. அதிலும், ஆங்கில வழியில், தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயிலும் மாணவர்களே முதலிடம் பிடிக்கிறார்கள்.

சாதி அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை, பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்விக்குப் போதுமானதாக இல்லை.

உயர்கல்வியும் தமிழ் வழியில் இருக்க வேண்டும் என்பதற்காக பொறியியல் கல்வியில் தமிழ் வழியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், பிளஸ்-2 வரை தமிழ் வழியில் படித்து, அதில் மாநில அளவில் முதல் 3 இடங்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ-மாணவிகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் கூறியது:

2007-ல் அரசு வெளியிட்ட அறிவிப்புக்குப் பின், தொடர்ந்து மெட்ரிக் பள்ளி மாணவர்களே சிறப்பிடம் பிடித்து வருகின்றனர். தமிழ் வழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வழியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களையும் அடையாளம் கண்டு, கெüரவித்து, உயர்கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.