போக்குவரத்துக்கு தகுதியற்ற வந்தவாசி-இரும்பேடு சாலை
வந்தவாசி, நவ.17: வந்தவாசி-இரும்பேடு சாலை கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு தகுதியாற்றதாக உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலை சுமார் 15 கி.மீ. நீளம் கொண்டத


வந்தவாசி, நவ.17: வந்தவாசி-இரும்பேடு சாலை கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு தகுதியாற்றதாக உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இச்சாலை சுமார் 15 கி.மீ. நீளம் கொண்டதாகும். பாதிரி, சளுக்கை, தழுதாழை, மங்கநல்லூர், விழுதுப்பட்டு, ஆரியாத்தூர், வழூர், விளாங்காடு, முருக்கேரி, காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம், நடுப்பட்டு, சாத்தனூர், கோயில்குப்பம், கீழ்நர்மா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்தவாசியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இச்சாலை வழியாகத்தான் செல்லவேண்டும். இச்சாலையில் உள்ள வழூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இச்சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடிக்கடி டயர் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...