செங்கல் விலை உயர்வு: வீடு கட்டும் பணிகள் பாதிப்பு

ஆரணி, அக் 8: ஆரணி பகுதியில் செங்கல் விலை 2 மடங்கு உயர்ந்துவிட்டதால் வீடு கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு செங்கற்கள் வி
Updated on
1 min read

ஆரணி, அக் 8: ஆரணி பகுதியில் செங்கல் விலை 2 மடங்கு உயர்ந்துவிட்டதால் வீடு கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு செங்கற்கள் விற்பனை செய்யும் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ஆரணி பகுதியில் சுமார் 200-க்கும் அதிகமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறன. ஒரு மாதத்துக்கு முன்பு வரை ரூ 2.50-க்கு விற்பனையான செங்கல் தற்போது ரூ 5 முதல் ரூ 7 வரை விற்பனை செய்யப்படுகிறது.

 திடீரென செங்கல் விலை உயர்த்தப்பட்டதால் வீடு கட்ட ஆரம்பித்த நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்களது வீடு கட்டுமானப் பணியை பாதியிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

விலை உயர காரணம் என்ன?

 செங்கல் விலை உயர என்ன காரணம்? என்று செங்கல் சூளை உரிமையாளர்களிடம் கேட்டதற்கு, கலைஞர் வீட்டு வசதி வாரிய திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு தமிழகத்தில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட வேண்டும் என்ற உத்தரவால் செங்கல் சூளைகளில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு செங்கற்களை வாங்கிச் செல்வது தான் முக்கிய காரணம். மழை காரணமாக 75 சதவீத உற்பத்தி பாதிகப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்ததாலும், விற்பனை அதிகமாவதாலும் விலை உயர்த்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

 மேலும் இது குறித்து கட்டட தொழிலாளிகள் கூறும்போது, "ஆரணி பகுதியிலிருந்து ஏராளமான லாரிகளில் செங்கல் லோடுகள் சென்னைக்கு செல்கின்றன. இதனால் ஆரணி பகுதி மக்களுக்கு செங்கற்கள் பற்றாக்குறையாக உள்ளது' என்றனர்.

தடையை மீறி விற்பனை

 கடந்த வாரம் ஆரணிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், செங்கல் விலை ஏற்றத்தால் செங்கல் லோடுகளை சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செங்கல் லோடு செல்லவிடாமல் பார்த்துக்கொள்ளும்படி அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். ஆனால் இதுவரை சென்னைக்கு செல்லும் செங்கல் லாரிகளில் ஒரு லாரியையும் அதிகாரிகள் தடுக்கவில்லை.

 கலைஞரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 1500 வீடுகள் கட்டப்படவுள்ளது. இதன் காரணமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.

ஹ மேலும் சென்னைக்கு ஆரணியில் இருந்து தொடர்ந்து செங்கற்களை ஏற்றி வருகின்றனர். வெளிமாவட்டங்களுக்கு செல்லும் செங்கல் லாரிகளை தடுத்து நிறுத்தினால்தான்  விலை குறைய வாய்ப்புண்டு என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com