அரக்கோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நில பேர வர்த்தகங்களும், கந்து வட்டியும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் தங்களுடைய சொந்த நிலங்களை விற்றுவிட்டு அந்தப் பணத்தை கையிருப்பாக வைத்துக்கொண்டு நகரில் வாழும் பெரும்பான்மையோர் இந்த வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வர்த்தகங்கள் அதிக அளவில் நடைபெறும்போதும், குறிப்பாக குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி சில மாதங்களில் உடனே அதை அதிக விலைக்கு விற்கும் போதுதான் இந்த வர்த்தகங்களில் குற்றசெயல்கள் ஆரம்பமாகின்றன. மேலும் அரக்கோணம் பகுதியில் பலர் இன்று வட்டிக்கு விடும் தொழிலை சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். அதிலும் கேட்டவுடன் பணம் என்றநிலையில் அதிக வட்டிக்கு பணம் பெறுபவர்கள், பணம் அளித்தவர்களும் இந்த குற்ற நடவடிக்கைகளில் சிக்குகின்றனர்.