ஆம்பூர், ஏப்.19: மின்தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் பெறுவது எப்போது என்ற ஏக்கமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுளளனர்.
சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மின்தடை நிலவி வருகிறது. முதலில் 3 மணி நேர மின்தடையாக இருந்தது பிறகு அது 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இப்போது அது மீண்டும் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 மணி நேர மின்தடையோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அவ்வப்போது அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என கூடுதலாக மின்தடை ஏற்படுகிறது.
இவ்வாறு ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
இந்த மின்தடையால் சாதாரண பொதுமக்களை விட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய தொழில் நிறுவனங்களைப் போல சிறு, குறுந்தொழில் முனைவோரிடம் ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தால் பாதிப்பின் அளவு அதிகமாக உள்ளது.
கச்சாப் பொருட்களின் விலை உயர்வுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இருந்தது. இப்போது மின்தடை காரணமாக உள்ளதாக தொழில் முனைவோர் கூறுகின்றனர்.
மின்தடை ஏற்படுவதால் உற்பத்தி பணி பாதிக்கப்படுவதோடு பணியாட்களிடையே தொழில் ஈடுபாடும் குறைந்து விடுகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. உற்பத்தி பாதிப்பால் உற்பத்தி விலை அதிகரிக்கிறது. உற்பத்தி விலை அதிகரிப்பால் விற்பனை விலை அதிகரிக்கிறது. இதனால் சந்தையில் அப்பொருள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.
மின்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இயங்கி வரும் பெரிய பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் தடையில்லா மின்சாரம் ஏன் சிறுதொழில் முனைவோருக்கு கிடைப்பதில்லை என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் இளைஞர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்குகிறது என்ற காரணத்தையும் இங்கு கூற முடியாது. பன்னாட்டு நிறுவனங்கள் வழங்குவதை விட அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களே வழங்கி வருகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க வேலூர் மாவட்ட தலைவர் எம்.வி. சுவாமிநாதன் கூறியது: தமிழ்நாட்டில் மட்டும் 3.18 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் உள்ளனர். இவர்கள் மூலம் 14.63 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மின்தடையால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் பாதிப்பால் பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். அரசும், மின்வாரியமும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது. இதே நிலைமை தொடர்ந்தால் மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் கூடங்களில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்றார்.
எனவே தமிழக அரசும், மின் வாரியமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின்தடை பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்பதே சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

