பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

40 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது!

வாணியம்பாடி, டிச. 15: வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ரயில்வே கேட் எண் 80-ல் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:11 pm

அ.ராஜேஷ்

வாணியம்பாடி, டிச. 15: வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ரயில்வே கேட் எண் 80-ல் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதையடுத்து, 40 ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளதால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 வளையாம்பட்டு-வாணியம்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க ரூ.25 கோடியே 55 லட்சம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

 அவ்வப்போது மூடப்படும் ரயில்வே கேட்!

 வளையாம்பட்டு ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ரயில் கேட் உள்ளது. வாணியம்பாடி நகரம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல இதைக் கடந்தே செல்ல வேண்டும். நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே செல்வதால், அவ்வப்போது ரயில்வே கேட் மூடப்படும் நிலை இருந்தது. இதனால், கிராம மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

 தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதேபோல், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச் செல்வதிலும் சிரமம் இருந்து வந்தது.

 2003-ல் ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

 இதையடுத்து, அப்பகுதியில் தரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என சுமார் 40 ஆண்டு காலமாக இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இதுதொடர்பாக 2003ஆம் ஆண்டு வளையாம்பட்டு ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 20-க்கும் மேற்பட்ட  கிராமங்களைச் சேர்ந்த  15 ஆயிரம் பேருக்கு பயன்!

 இந்த ரயில்வே கேட் அமைக்கப்படுவதால், பொன்னி நகர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், ரத்தனவட்டம், லாலா ஏரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15,000 மக்கள் பயன்பெறுவர்.

"முதல்வருக்கு நன்றி'

இதுகுறித்து வளையாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலா சிகாமணி கூறுகையில்,

 மேம்பாலம் கேட்டு, பல ஆண்டு காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தோம். இதுதொடர்பாக ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.