எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேற்கூரை சேதமடைந்த குழந்தைகள் நலமைய கட்டடம்

வந்தவாசி, ஜன. 4: வந்தவாசி அருகே சோரபுத்தூரில் உள்ள குழந்தைகள் நலமைய கட்டடம் மேற்கூரை சேதமடைந்து மழைக் காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. தெள்ளார் ஒன்றியத்துக்குட்பட்டது சோரபுத்தூர் ஊராட்சி. இக் கிராம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:45 am

கணேஷ்கிரி

வந்தவாசி, ஜன. 4: வந்தவாசி அருகே சோரபுத்தூரில் உள்ள குழந்தைகள் நலமைய கட்டடம் மேற்கூரை சேதமடைந்து மழைக் காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.

தெள்ளார் ஒன்றியத்துக்குட்பட்டது சோரபுத்தூர் ஊராட்சி. இக் கிராமத்தில் சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் நல மையம் இயங்கி வருகிறது.

 இதில் இரண்டரை வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு பகல் உணவும் தரப்படுகிறது. இங்கு ஓர் ஆசிரியையும், ஒரு சமையலரும் பணியில் உள்ளனர்.

 இந்த குழந்தைகள் நலமைய கட்டடத்தில் வெளிப்புற மற்றும் உள்புற சுவர்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையை தாங்கும் கான்கிரீட் குறுக்குத் தூணிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் விரிசல்கள் வழியே நீர்க்கசிவு ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் படிக்கவும், விளையாடவும் முடிவதில்லை. இருப்பு அறையில் வைக்கப்படும் பொருள்களும் நீரில் நனைந்து சேதம் அடைகின்றன. மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது.

இங்குள்ள கழிவறையில் கதவு மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால் அதைப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

 இதுகுறித்து புகார் தெரிவித்தும் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 இந்த குழந்தைகள் நல மைய கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.