சலவைத் துணிகளுக்கு சமூக விரோதிகள் தீ சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை தாமரைக் குளத்தில் சலவைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள துணிகள் சமூக விரோதிகளால் தீக்கிரையாயின. இதனால் சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தி
Updated on
1 min read

திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை தாமரைக் குளத்தில் சலவைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள துணிகள் சமூக விரோதிகளால் தீக்கிரையாயின. இதனால் சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் தாமரைக்குளம் உள்ளது. எப்போதும் நீர் நிரம்பி உள்ள இக்குளத்தில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வசிக்கும் 30 சலவைத் தொழிலாளர்கள் குடும்பங்கள் துணிகளை சலவை செய்வது வழக்கம்.

 துணிகளை முந்தைய நாள் இரவே குளத்தின் அருகே ஊற வைத்து விட்டு அடுத்த நாள் துவைப்பர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் ஏராளமான துணிகளை சலவைத் தொழிலாளர் ஊற வைப்பதற்காக வைத்து விட்டு டீ குடிக்கச் சென்றனர்.

 அப்போது அங்கு குடிபோதையில் வந்த சமூக விரோதிகள் துணிகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 25 பட்டு சேலைகள், 10 பட்டு வேட்டிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிகள் தீயில் எரிந்து விட்டன. பின்னர் வந்து பார்த்த சலவைத் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மணியிடம் தகவல் தெரிவித்தனர்.

 இச் சம்பவம் குறித்து அவர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சாலை மறியல்

 இதற்கிடையே சனிக்கிழமை தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும், சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும், தாமரைக் குளத்தில் நகராட்சி அளித்த வாக்குறுதியின்படி ரூ. 9 லட்சத்தில் சலவைத் துறை கட்டித் தர வேண்டும் எனக்கோரி சலவையாளர்கள் எரிந்த துணிகள், கழுதைகளை வைத்து மறியல் செய்தனர்.

 தகவல் அறிந்ததும் டிஎஸ்பி வீரராகவன், இன்ஸ்பெக்டர் குணசேகரன், நகராட்சி பொறியாளர் சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

 அதில் சமாதானமடையாத சலவைத் தொழிலாளர்கள் தொடர்ந்து மறியல் செய்ததால் போலீஸôர் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் தண்டராம்பட்டு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com