தானிய மண்டியில் ரூ. 6 லட்சம் பணம், நகை திருட்டு
செங்கம், ஜன. 8: செங்கம் பஸ் நிலையம் அருகே தானிய மண்டியில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பணம், நகை திருடு போனது. செங்கம் துக்காப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே, இளங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மக


செங்கம், ஜன. 8: செங்கம் பஸ் நிலையம் அருகே தானிய மண்டியில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பணம், நகை திருடு போனது.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே, இளங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ஞானவேல் தானிய மண்டி நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஞானவேல் வழக்கம்போல் மண்டியை பூட்டிவிட்டு மாடிமீது இருக்கும் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை தானிய மண்டியை திறந்தபோது அதன் பின்புறக் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது. மேலும் மேஜை டிராயரை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்கள், அதிலிருந்த லாக்கர் சாவியை எடுத்து
லாக்கரில் இருந்த 69 பவுன் நகை, 2.45 கிலோ வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. பாண்டியன், செங்கம் டி.எஸ்.பி. தில்லைநாயகம், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உள்ளிட்ட போலீஸôர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
செங்கம் டி.எஸ்.பி. தில்லை நாயகம், போளூர் டி.எஸ்.பி. பலூலுல்லா தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...