கடன் தர அலைக்கழிக்கப்படும் கரும்பு விவசாயிகள்
அரக்கோணம், ஜன.20: சர்க்கரை ஆலை சிபாரிசு செய்தும் கடன் தர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அலைக்கழிக்க வைப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அரக்கோணம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள


அரக்கோணம், ஜன.20: சர்க்கரை ஆலை சிபாரிசு செய்தும் கடன் தர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அலைக்கழிக்க வைப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரக்கோணம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் கரும்புகளை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இவர்களுக்கு விவசாயக் கடன் தர ஆலை நிர்வாகம் சிபாரிசு செய்கிறது. ஆனால்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளோ ஒரு மாதத்துக்கு மேல் தாமதப்படுத்துகின்றனவாம். குறிப்பாக அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, மேல்களத்தூர் உள்ளிட்ட பல வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற மாதக்கணக்கில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட பாரதீய கிசான் சங்கத் தலைவர் ஏ.டி.பாபு தெரிவிக்கையில், விவசாயிகள் கடன் பெற 3 முதல் அதிகபட்சம் 5 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது அரக்கோணம் வட்டத்தில் பல வங்கிகள் வேண்டுமென்றே விவசாயிகளை மாதக்கணக்கில் அலைக்கழிக்க வைக்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது என்றார்.
இது குறித்து மேல்களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மோகன்ராஜை கேட்டபோது, தன்னிடம் 38 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வங்கியில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் கடன் தருவதில் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் 3 நாள்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் அளிக்கப்படும் என்றார்.
வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கவிதா கூறியது:
கரும்பு விவசாயிகள் கடன் பெற அலைக்கழிக்கப்படுவதாக இது வரை புகார் இல்லை. புகார்கள் வரும் பட்சத்தில் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...