வலுவேற்றும் பணி தொடங்கியது
அரக்கோணம், ஜன 23: அரக்கோணம் ரயில் நிலையம் அருகேயுள்ள 86 ஆண்டுகள் ஆன இரட்டைக்கண் வாராவதி பாலம் வலுவிழந்துள்ளது. இதையடுத்து, பாலத்துக்கு வலுவேற்ற அவசர கால பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் துவக்கியு


அரக்கோணம், ஜன 23: அரக்கோணம் ரயில் நிலையம் அருகேயுள்ள 86 ஆண்டுகள் ஆன இரட்டைக்கண் வாராவதி பாலம் வலுவிழந்துள்ளது. இதையடுத்து, பாலத்துக்கு வலுவேற்ற அவசர கால பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் துவக்கியுள்ளது.
1916ஆம் ஆண்டு ராயபுரம்-வாலாஜாபேட்டை இடையே நாட்டின் மூன்றாவது இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
அப்போது ரயில் நிலைய கழிவுநீர் போக்குவரத்துக்காக இந்தப் பாலம் கட்டப்பட்டு, 1924ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தொடர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு நகரப் போக்குவரத்துக்காக இப்பாலம் பயன்படுத்தப்பட்டது. இப்பாலத்தின் மீது 12 இருப்புப் பாதைகள் அமைந்துள்ளன.
இந்தப் பாலத்தின் ஆயுள்காலம் 75 வருடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தின் உறுதி தன்மையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே பொறியியல் துறை மேம்பால நிபுணர்கள் கணக்கிட்டபோது, மேலும் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் இப்பாலத்தை ரயில்வே பொறியியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாலம் வலுவிழந்து வருவதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்பித்தனராம்.
இதையடுத்து, பாலத்தை வலுவேற்றும் பணிகளை ரயில்வே நிர்வாகம் துவக்கியுள்ளது. பாலத்தின் ஒரு கண்பகுதியான மக்கள் நடந்து செல்லும் பகுதியில் இந்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. உள்புறம் இருக்கும் துருபிடித்த இரும்பு கர்டர்களை சுற்றி, புதிய இரும்பு பிளேட்டுகள் பொருத்தும் பணியும் தொடங்கியள்ளது.
இதுகுறித்து ரயில்வே பாலங்கள் ஆய்வாளர் அலுவலகம் தரப்பில் கேட்டபோது,
பாலத்தின் பராமரிப்பு பணி வழக்கமானதுதான். 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும் பகுதியாக இருப்பதால், இங்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாலத்துக்கு வலுவேற்றும் பணி நடக்கிறது. 2 கண் பகுதிகளிலும் உள்ள 170 இரும்பு கர்டர்களுக்கு இரும்பு பிளேட்டுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால், இப்பாலத்தில் ஆயுள் அதிகரிக்கும். இரட்டைக் கண் வாராவதியினுள் பகலில் தொடர்ந்து போக்குவரத்து இருப்பதால், இப்பால பணிகள் தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் குறைந்தது 15 நாள்கள் முதல் 20 நாள்கள் வரை நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...