நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரியில் மேலும் ஒரு தொட்டில் குழந்தை!

தருமபுரி, ஜூலை 19: தருமபுரியில் உள்ள தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்ட சிசுவுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 1,321 சிசுக்கள் இம் மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:38 pm

ச. குமரன்

தருமபுரி, ஜூலை 19: தருமபுரியில் உள்ள தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்ட சிசுவுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 1,321 சிசுக்கள் இம் மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆதரவின்றி கைவிடப்படும் சிசுக்களை பராமரிக்க 13.4.2002-ல் தொட்டில் குழந்தை பராமரிப்புத் திட்டத்தை அரசு தொடங்கியது. சமூக நலத்துறை சார்பில் இத் திட்டத்தின் கீழ் தருமபுரி, கடலூர், கம்பம், சேலம் உள்ளிட்ட இடங்களில், தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இதில் தருமபுரியில் உள்ள மையத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் மட்டும்

இதுவரை 1,320 சிசுக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களில் ஆதரவற்று

கிடத்தப்படும் சிசுக்கள் மீட்கப்பட்டு, இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதன்பின் சில நாள்களில், தொண்டு நிறுவனங்களிடம் இந்த சிசுக்கள் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந் நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்துக்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன்-பராசக்தி தம்பதி செவ்வாய்க்கிழமை வந்தனர். பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவை கொண்டு வந்திருந்தனர்.

விவசாயக் கூலித் தொழிலாளிகளான இத் தம்பதிக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. வறுமை காரணமாக ஏற்கெனவே தவிப்பில் உள்ள தங்களால் 4-வதாகப் பிறந்த இப் பெண் சிசுவை வளர்க்க இயலாது என்று கூறி தொட்டில் குழந்தை மையத்தில் ஒப்படைத்தனர். இதற்கு சட்டப் பூர்வமாக உறுதிமொழிப் பத்திரமும் அளித்தனர்.

இச் சிசுவை செவிலியர்கள் இரவு பகலாக பராமரித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த மையத்தில் 300 சிசுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 30 நாள்களில் இந்த மையத்துக்கு வந்த 6-வது சிசு இதுவாகும்.

புறக்கணிக்கப்படும் மையம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகே செயல்பட்டு வந்த இந்த மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது குறித்து தினமணியில் கடந்த ஜூன் 27-ல் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இந்த மையம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே உள்ள புறநோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால், மருத்துவமனைக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் புகை, புழுதிக் காற்றால் பரவும் தூசி ஆகியவற்றால் தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பச்சிளம் சிசுவுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் மற்றும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி கூறியது: சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் நிறைவான வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்துக்கு தொட்டில் குழந்தைகள் வரவேற்பு மையம் விரைவில் மாற்றப்படும் என்றார் ஆட்சியர்.

தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனைகளை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. எண்: 8695342451.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.