ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

செய்யாறு தொகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படுமா?

செய்யாறு, ஜூன் 3: செய்யாறு தொகுதியில் அரசு தொழில்நுட்பக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.  செய்யாறு தொகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேல் மக்கள் வசித்து வரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:28 am

தே.சாலமன்

செய்யாறு, ஜூன் 3: செய்யாறு தொகுதியில் அரசு தொழில்நுட்பக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

 செய்யாறு தொகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியாக உள்ளது. நாட்டிலேயே பெரிய கூட்டுறவு சர்க்கரை ஆலையான செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முதல், மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டை வரை இங்குள்ள தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர்.

 செய்யாறு கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

 செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெருங்கட்டூர் ஆண்கள் மேநிலைப் பள்ளி போன்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பெற்றுவருகின்றனர்.

 இந்நிலையில் இப் பகுதி மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு சார்பில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மட்டுமே உள்ளது.

 இத் தொகுதியில் 3 ஆசிரியர் பயிற்சி நிலையங்கள், 2 பாலிடெக்னிக்குகள், ஒரு ஐ.டி.ஐ. என உள்ளபோதிலும் இவை அனைத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகும். இக் கல்வி நிலையங்களில் வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே சேர்ந்து பயில முடிகிறது.

 ஏழை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெறமுடியாத நிலை உள்ளது.

 செய்யாறு தொகுதியில் 90 சதவிகித பள்ளிகள் கிராமப்பகுதிகளில் அமைந்துள்ளன. இப்பகுதி எழுத, படிக்கத் தெரியாத பெற்றோர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில் இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்புக்கு உகந்த தொழில்நுட்பக் கல்வி அளிக்க முடியாத நிலை உள்ளது.

 எனவே செய்யாறு தொகுதி ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.