/

பிளஸ் 1-ல் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

அரக்கோணம், ஜூன் 17: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1-ல் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். தமிழக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள இலவச லேப்டாப் திட்டமே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் கூறுகி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:41 am

எஸ்.சபேஷ்

அரக்கோணம், ஜூன் 17: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1-ல் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். தமிழக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள இலவச லேப்டாப் திட்டமே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

 இதேநேரத்தில், தொழில் கல்வியான பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தபடி, செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 அரசு, அரசு நிதியுதவி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதையடுத்து, மேல்நிலைக் கல்வியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக அளவு மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சேர விரும்புவதால், குறிப்பிட்ட குரூப்புகளில் சேர இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என வரையறைகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வகுக்கத் தொடங்கி விட்டனர்.

 மேலும், சுயநிதி பள்ளிகளில் சேரவும் மாணவர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

 "ஆண்டுதோறும் தொழில் படிப்புகளுக்கான பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.க்களில் சேர போட்டி நிலவும். இந்தாண்டு மேற்கண்ட படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பிரபலமான பாலிடெக்னிக்குகளில் கூட வழக்கத்தைவிட குறைந்த அளவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.