ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சீர்கெட்டுக் கிடக்கும் தண்டரை அணைக்கட்டு கால்வாய்

செய்யாறு, நவ.8: செய்யாறு அருகே உள்ள தண்டரை அணைக்கட்டு கால்வாய் செடி, கொடிகளால் மூடப்பட்டு சீரழிந்த நிலையில் உள்ளது. இதனால் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் செய்யாறு வட்ட விவசாயிகள் பெரும் அவதிப்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:19 pm

தே.சாலமன்

செய்யாறு, நவ.8: செய்யாறு அருகே உள்ள தண்டரை அணைக்கட்டு கால்வாய் செடி, கொடிகளால் மூடப்பட்டு சீரழிந்த நிலையில் உள்ளது. இதனால் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் செய்யாறு வட்ட விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டம், தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக நெல் சாகுபடியில் சிறந்து விளங்கும் பகுதியாகும். செய்யாறு வட்டத்தில் சுமார் 6135 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டி, ரூ. 1 கோடி மதிப்பில் தண்டரை அணைக்கட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1969-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1975-ல் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தினால் தூசி, மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பயனடைந்து வந்தனர். தண்டரை அணைக்கட்டில் இருந்து சுமார் 21 கி.மீ. தூரத்துக்கு பாசனக் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் கால்வாய் வழியாகச் செல்லும் நீர், பெரும்பள்ளம், வடதண்டலம், கொடநகர், செய்யாறு வழியாக பரிதிபுரம், புளியரம்பாக்கம், காழியூர், பெருங்களத்தூர், பல்லி, இரும்பந்தாங்கல், சித்தாத்தூர் உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியவுடன் கடைசியாக திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு சென்று சேர்கிறது.

மாமண்டூர் ஏரி நீரை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மூன்று போகத்துக்கும் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வந்தனர்.

பராமரிக்கப்படாத

கால்வாய்

இந்த பாசனக் கால்வாய் அமைக்கப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை ஒரு முறை கூட அது சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கால்வாய் முழுவதும் புல், பூண்டுகள் முளைத்து மூடிக்கிடக்கிறது. இதனால் இக்கால்வாய் வழியாக பாசன நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயின் தொடக்கப் பகுதி சேதமடைந்து பாசன நீர் மீண்டும் ஆற்றுக்கே சென்று விடுகிறது.

இதனால் இந்த கால்வாயை நம்பியிருந்த அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர். நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

செடி, கொடிகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று செய்யாறு மற்றும் தூசி, மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த நீர்ப்பாசன சங்கத்தினர், விவசாயிகள் என பலரும் அரசுக்கு மனுக்களை அனுப்பியவாறு உள்ளனர்.

மேலும் வட்டாட்சியிர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வருகின்றனர். ஆனால் இது வரை கால்வாய் சீரமைக்கப்படவில்லை.

எனவே இந்த கால்வாயை சீரமைக்க பொதுப்பணித் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.