கார்த்திகை தீபம்: அவல நிலையில் தேசிய நெடுஞ்சாலை!
திருவண்ணாமலை, நவ. 26: திண்டிவனம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அவல நிலையில் காணப்படுகிறது. புதுச்சேரி-பெங்களூர் இடையே திண்டிவனம், செஞ்சி திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் சாலை தேசிய நெ


திருவண்ணாமலை, நவ. 26: திண்டிவனம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அவல நிலையில் காணப்படுகிறது.
புதுச்சேரி-பெங்களூர் இடையே திண்டிவனம், செஞ்சி திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை எண் 66 என மத்திய நெடுஞ்சாலைத் துறையால் அறிவிக்கப்பட்டு, இரு வழிப்பாதையாக உள்ளது.
நாள்தோறும் இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூர், ஓசூர், மும்பை செல்லும் வாகனங்கள் இச்சாலையைதான் பயன்படுத்தி வருகின்றன.
ஆன்மிக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்கள் இச்சாலையையொட்டி அமைந்துள்ளன.
புதுச்சேரி-திண்டிவனம் இடையே ஆன சாலை 4 வழிப்பாதையாக உள்ளது. ஆனால், திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை செல்லும் சாலை அவல நிலையில் உள்ளது.
சாலையில் மரணக்குழிகள்!
ஆனால், செஞ்சியில் இருந்து கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை வரை செல்லும் 30 கி.மீ. தூர சாலையும், திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வரை செல்லும் 40 கி.மீ. தூர சாலையும் மரணக்குழிகள் போல் காணப்படுகின்றன.
இவற்றை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
சாலையை கடக்க தாமதம்!
திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு 45 நிமிடங்களில் சென்று விடலாம் என்ற நிலை மாறி, இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது.
குண்டும், குழியுமான சாலையால் இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தாற்காலிகமாக பாதையை செப்பனிடும் பணி கூட நடைபெறவில்லை.
குண்டும், குழியுமான இச்சாலையில் விபத்துகள் நேரிடவும் வாய்ப்பு உள்ளன.
எனவே, இச்சாலை சீரமைப்பு பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை உடனே தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...