ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சுகாதார அலுவலகம்

செய்யாறு, ஏப்.2: செய்யாறில் ரூ.1.25 கோடியில் கட்டடப்பட்ட சுகாதார அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம், அனுக்காவூர், செய்யாறு, ஆரணி, ஆ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:26 pm

தே.சாலமன்

செய்யாறு, ஏப்.2: செய்யாறில் ரூ.1.25 கோடியில் கட்டடப்பட்ட சுகாதார அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம், அனுக்காவூர், செய்யாறு, ஆரணி, ஆரணி மேற்கு, தெள்ளாறு, பெரணமல்லூர், வந்தவாசி ஆகிய 8 ஒன்றியங்களில் 41 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் இதர மருந்துப் பொருள்களைப் பெற்றுத் தருவதற்கும், சுகாதாரம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய் கோட்டமான செய்யாறில் சுகாதாரப்பணிகள் இயக்குநர் துணை அலுவலகம் தொடங்கப்பட்டது.

செய்யாறில் சுமார் 25 ஆண்டுகளாக இந்த அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது. இதற்கு மாதம் ரூ.17 ஆயிரம் வாடகை கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் செய்யாறு பழைய மருத்துவமனை சாலையில் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தில், ரூ.1.25 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதையடுத்து இக் கட்டடம் பொது சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் கட்டடத்துக்குத் திறப்பு விழா நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து இக்கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.