மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பயன்பாட்டுக்கு வராத ஆட்டு இறைச்சிக் கூடம்

செங்கம், பிப். 16: செங்கத்தில் பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் ஆட்டு இறைச்சிக் கூடம் (ஆடுகள் வதை செய்யும் கூடம்) பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட தளவாநாயக்கன்பேட்டை பேரூ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:12 pm

ஏ. சரவணன்

செங்கம், பிப். 16: செங்கத்தில் பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் ஆட்டு இறைச்சிக் கூடம் (ஆடுகள் வதை செய்யும் கூடம்) பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட தளவாநாயக்கன்பேட்டை பேரூராட்சி குப்பைக் கிடங்குக்குப் பக்கத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நவீன ஆட்டு இறைச்சிக் கூடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் அதை பயன்படுத்த இறைச்சிக் கடை உரிமையாளர்கள் முன்வரவில்லை. எங்கு அவர்கள் இறைச்சியை விற்பனை செய்கிறார்களோ அதே இடத்தில் ஆடுகளை வெட்டி மாமிசமாக்குகிறார்கள். ஆட்டின் கழிவுப் பொருள்களை, பழை போலீஸ் நிலையம் அருகிலும், செய்யாற்றிலும் கொட்டுகின்றனர்.

இதனால் செய்யாற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. சில இடங்களில் தொற்றுநோய் பரவு நிலையும் உருவாகியுள்ளது. எனவே இனி ஆட்டு இறைச்சிக் கூடத்தில்தான் ஆடுகளை வெட்டி விற்பனை செய்யவேண்டும் என்று இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.