ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

16 கால் மண்டபமாக ஒரு நடவாவிக் கிணறு!

செய்யாறு, ஜூலை 2: செய்யாறை அடுத்த ஐயங்கார்குளத்தில் உள்ள நடவாவிக் கிணறு 16 கால் கல்மண்டபம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம், செய்யாறு செல்லும் சாலையில் சென்றால் ஐயங்கார்க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:07 pm

தே.சாலமன்

செய்யாறு, ஜூலை 2: செய்யாறை அடுத்த ஐயங்கார்குளத்தில் உள்ள நடவாவிக் கிணறு 16 கால் கல்மண்டபம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம், செய்யாறு செல்லும் சாலையில் சென்றால் ஐயங்கார்குளத்தை அடைந்துவிடலாம். திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளான ஐயங்கார்குளம், புஞ்சை அரசந்தாங்கல், கோளிவாக்கம் ஆகிய மூன்று கிராமங்கள் சந்திக்கும் பகுதியில் இந்த நடவாவிக் கிணறு உள்ளது.

இது 1585-1614ஆம் ஆண்டு விஜய நகரப் பேரரசு காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நுழைவாயில்: தரை மட்டத்துக்கு மேல் கல்தூண்களால் ஆன நுழைவு வாயில் நம்மை வரவேற்கிறது. இத்தூண்களில் நடனமாடும் மகளிர் உருவங்களும், தூணின் மேற்பகுதியில் இருபுறங்களிலும் யானையுடன் கூடிய கெஜலட்சுமி உருவமும் வடிக்கப்பட்டுள்ளன.

கீழிறங்கும் படிக்கட்டுகள்: நுழைவு வாயிலைக் கடந்து சென்றால் சுமார் 3 அடி அகலம் கொண்ட படிக்கட்டுகள் நம்மை கீழ் நோக்கி இட்டுச் செல்கின்றன. அப்பாதை 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவிக் கிணற்றில் சென்று சேருகிறது.

16 கால் மண்டபம் போல: 16 கல் தூண்களுடன் உள்ளது அந்தக் கிணறு. கிணற்றைச் சுற்றி வருவதற்கு வசதியாக 4 அடி அகலத்துக்கு நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சித்திரை பௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இந்த நடவாவி கிணற்றில் இறங்கி நீராடிச் செல்வது வழக்கம்.

ஆண்டு தோறும் இவ்விழா நடைபெற்று வருகிறது. இந்த மண்டபம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.