குளத்து நீரையே பருகி வாழும் கிராமம்!
செய்யாறு, ஜூலை 20: செய்யாறை அடுத்துள்ள பல்லி கிராம மக்கள் இன்றும் குளத்து நீரையே பருகி தாகம் தணித்து வருகின்றனர். செய்யாறு ஒன்றியத்தில் காஞ்சிபுரம் சாலையில் உள்ளது பல்லி கிராமம். இங்கு சுமார் 3,200 பே


செய்யாறு, ஜூலை 20: செய்யாறை அடுத்துள்ள பல்லி கிராம மக்கள் இன்றும் குளத்து நீரையே பருகி தாகம் தணித்து வருகின்றனர்.
செய்யாறு ஒன்றியத்தில் காஞ்சிபுரம் சாலையில் உள்ளது பல்லி கிராமம். இங்கு சுமார் 3,200 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் வசதிக்காக கிணறு ஒன்றும், 3 கைப்பம்புகள் மற்றும் இரண்டு மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டிகளும் உள்ளன.
காழியூர் கூட்டுக்குடிநீர்த் திட்டம், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் 5 சதவீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கைப்பம்பு மூலம் கிடைக்கும் நீர் உப்பு நீராக உள்ளதாம்.
இதனால் அதை குடிப்பதற்கோ, சமையலுக்கோ மக்கள் பயன்படுத்துவதில்லை. இதற்காக ஊருக்கு அருகாமையில் உள்ள மண்டப குளத்து நீரையே எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.
"பல ஆண்டுகளாக மண்டப குளத்து நீரைத்தான் நாங்கள் பருகி வருகிறோம். இந்தக் குளத்து நீரைப் பருகினால்தான் தாகம் தணிகிறது. சமையல் நன்றாக உள்ளது' என்கின்றனர் அந்த கிராம மக்கள்.
பாசி படிந்து, சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளத்து நீரைத்தான் இவர்கள் பருகி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செய்யாற்று நீரை கொண்டு வர முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...