சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பாலாற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை!

வாணியம்பாடி, மார்ச் 4: வாணியம்பாடி பாலாற்றில் மணல் கொள்ளை அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. பாலாற்றில் குவாரி செயல்படாத இடங்களில் மணல் திருட்டு அதிக அளவில் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாட்டு வண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

அ.ராஜேஷ்

வாணியம்பாடி, மார்ச் 4: வாணியம்பாடி பாலாற்றில் மணல் கொள்ளை அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

பாலாற்றில் குவாரி செயல்படாத இடங்களில் மணல் திருட்டு அதிக அளவில் உள்ளது.

10-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஒன்று சேர வருகின்றனர். இவர்கள் ஒரு வண்டிக்கு சில பேர் என குறைந்தது 40 பேர் வரை உள்ளனர். இதைத் தட்டிக் கேட்கும் கிராம மக்கள் ரௌடிகளால் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் உண்டு.

மாட்டு வண்டிகளில் சேகரிக்கப்படும் மணல், ஆற்றின் கரையோரங்களில் குவிக்கப்படுகிறது. இங்கிருந்து லாரிகளில் கடத்தப்பட்டு, வேலூர் மாவட்டத்துக்கு மட்டுமில்லாமல், சென்னை போன்ற போன்ற நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்காக ஆற்றின் கரையோரத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  இந்த இடங்களை லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு வாங்கியும், குத்தகைப் பெற்றும் மணல் திருடுட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசுத் துறைக்கு சமூக ஆர்வர்கள் பல முறை புகார்கள் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை சரிவர நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது வருவாய்த் துறையினர் மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தாலும், மணல் கொள்ளை நடப்பதைத் தடுக்க முடியவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

இதுகுறித்து திருப்பத்தூர் துணை ஆட்சியர் ஷில்பா பிரபாகரிடம் கேட்டபோது, அவர் கூறியது: பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதிகாரிகளையும் மக்களையும் மிரட்டும் நபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் வருவாய் மற்றும் காவல் துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணல் கொள்ளையில் ஈடுபடுவது யார் என்பது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தெரியும்.

மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.

பாலாற்றில் ஏற்கெனவே நீர்வரத்து நின்றுவிட்ட நிலையில் பல அடி ஆழத்துக்கு மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.