நீடித்த நவீன கரும்பு உற்பத்தி தொழில்நுட்பம்
செய்யாறு: நீடித்த நவீன கரும்பு உற்பத்தி தொழில் நுட்பத்தில் குறைந்த அளவு விதை, நீர், உரம் ஆகியவற்றை பயன்படுத்தி அதிக அளவு மகசூல் பெறும் வழிமுறை குறித்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி ஆட்சியர்


செய்யாறு: நீடித்த நவீன கரும்பு உற்பத்தி தொழில் நுட்பத்தில் குறைந்த அளவு விதை, நீர், உரம் ஆகியவற்றை பயன்படுத்தி அதிக அளவு மகசூல் பெறும் வழிமுறை குறித்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி ஆட்சியர் பா.ரேணுகாம்பாள் யோசனை தெரிவித்துள்ளார்.
நாற்றங்கால் அமைத்தல்
ஒரு பருவை மட்டும் விதைக் கரணையிலிருந்து பரு வெட்டும் கருவியின் மூலம் வெட்டி எடுத்து, நன்கு மக்கிய தென்னை நார் கழிவு நிரப்பிய பிளாஸ்டிக் தட்டுகளில் முளைக்க வைக்க வேண்டும். இதன் மூலம் முளைப்புத்திறன் அதிகமாகிறது.
நடவு செய்தல்
நிழல் வலையில் வளர்ந்துள்ள 25 முதல் 35 நாள் நாற்றுகளை நடவு வயலில் நட வேண்டும். தற்போது பின்பற்றப்படும் முறையால் ஏக்கருக்கு சுமார் 30,000 விதை கரணைகள் நடவு செய்யப்பட்டு, 25,000 ஆலை அரவைக் கரும்பு பெறப்படுகிறது. இந்த முறையில் வெறும் 5000 நாற்றுகளை, வரிசைக்கு வரிசை 5 அடியும், நாற்றுக்கு நாற்று 2 அடியும், இடைவெளி விட்டு நடவு செய்தால், ஏக்கருக்கு சுமார் 45,000 முதல் 55,000 வரை ஆலை அரவைக் கரும்புகள் கிடைக்கும்.
நீர் நிர்வாகம்
நடவு வயலில் அதிக அளவு நீர்தேக்கத்தை ஏற்படுத்தாமல் தேவையான அளவுக்கு ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும். நடவு வயலில் நீர் தேங்குவது பயிரின் வளர்ச்சியை பாதிக்கும்.
உர நிர்வாகம், இயற்கை வழி பயிர்பாதுகாப்பு
இந்த முறையில் கனிம உரங்கள், இயற்கை உரம், உயிர் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தாமல், விவசாயிகள் உயிர்தொழில்நுட்பம் முறையில் பூச்சி நிர்வாகம் ஆகியவற்றை பயன்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நீண்ட கால பயனை பெறமுடியும்.
ஊடு பயிரிடுதல்
காராமணி, உளுந்து, பயறு, கத்தரிக்காய், கொண்டை கடலை முதலியன ஊடுபயிராக பயிரிடலாம். இதனால் களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...