ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திருவத்திபுரம் நூலகம் தரம் உயர்த்தப்படுமா?

செய்யாறு, மார்ச் 22: திருவத்திபுரம் (செய்யாறு) கிளை நூலகத்தை முதல்நிலை நூலகமாக்கி வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திருவத்திபுரம் கிளை நூலகம் மூன்றாம் நிலை நூலகமாக 1955-ல் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:53 am

தே.சாலமன்

செய்யாறு, மார்ச் 22: திருவத்திபுரம் (செய்யாறு) கிளை நூலகத்தை முதல்நிலை நூலகமாக்கி வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

திருவத்திபுரம் கிளை நூலகம் மூன்றாம் நிலை நூலகமாக 1955-ல் தொடங்கப்பட்டது. இப்போது சுமார் 4,300 சதுர அடி பரப்பில் இரண்டாம் நிலை நூலகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 41 ஆயிரம் நூல்கள் உள்ளன. தினமும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

2003-ம் ஆண்டில் 5,300 உறுப்பினர்களும் 30 புரவலர்களும் கொண்டிருந்த இந்த நூலகத்தில் இப்போது 2000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் 129 புரவலர்களும் உள்ளனர்.

இந்நிலையில் வாசகர் வட்டம் சார்பில் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று ரூ.40 ஆயிரம் செலவில் சுற்றுச்சுவரும், ரூ.20 ஆயிரம் செலவில் இரும்புக் கதவும் அமைப்பட்டது. செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.80 ஆயிரம் செலவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் நூலகத்துக்கு கட்டட வசதி போதுமானதாக இல்லை. சிறுவர்கள், முதியோர் என பல்வேறு தரப்பினரும் நூலகத்தை பயன்படுத்தும் நிலையில், அவசரத் தேவைக்கு கழிப்பிட வசதி இல்லை.

இப்போது இரண்டாம் நிலை நூலகமாக உள்ள இந் நூலகத்தை முதல்நிலை நூலகமாக நிலை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர்கள், போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தி நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.