பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சனிக்கிழமை மதியம் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சனிக்கிழமை காலை முதல் இங்கு வெயில் கடுமையாக இருந்தது. மதியம் 3 மணியளவில் இடியுடன், பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்தது.
அப்போது ரஷீதாபாத், செக்குமேடு பகுதியில் சிமென்ட் ஷீட், தென்னை ஓலை ஆகியவற்றால் கட்டப்பட்டிருந்த 9 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
ஓம்குப்பத்தில் 2 வீடுகளின் மண் சுவர்கள் சரிந்து விழுந்தன. கொத்தபல்லியில் ஒரு வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் முருகன் என்பவரின் வீடு சேதமடைந்தது. சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியதும் மின் விநியோகம் தடைபட்டது. இரவு வரை மின்சாரம் வரவில்லை.
ஏரிகுத்தியில் 23 வீடுகளின் மேற்கூரைகள் சேதம்: பேர்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததில், ஏரிகுத்தி மகபூப் நகரில் உள்ள 23 வீடுகளின் சிமென்ட் ஷீட் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
எம்எல்ஏ கு. லிங்கமுத்து, ஒன்றியக் குழுத் தலைவர் பொகளூர் டி. பிரபாகரன், வட்டாட்சியர் எம். கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஆம்பூர்
ஆம்பூரில் சனிக்கிழமை காலையிலிருந்தே கடுமையான வெயில் காணப்பட்டதால், அனல் காற்று வீசியது.
இந்நிலையில், மாலையில் வானத்தில் மேக மூட்டம் காணப்பட்டது. இரவு சுமார் 7 மணிக்கு வானம் இருண்டு திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் முக்கால் மணி நேரம் விடாது கனமழை பெய்தது. அதனால் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 14-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி!!

என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக தகவல் வந்தது! திருமாவளவன்

நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்!
விடியோக்கள்

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
