பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்றுவர பழக்கப்படுத்த வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அ.முகமது ஜான் கேட்டுக்கொண்டார்.
வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியும், எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் நூலகப் புரவலர்களை கெüரவித்தும் அமைச்சர் பேசியது:
பள்ளி, கல்லூரி படிப்புகள் மட்டுமே அறிவை வளர்க்காது. பொது புத்தகங்களை படிப்பதன் மூலமே உலகையும், பொது விஷயங்களையும் அறிந்த மனிதராக உருவாக முடியும்.
அவ்வகையில் நூலகங்களை நாடி பொது அறிவு மற்றும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற துறைகளைச் சேர்ந்த புத்தகங்களை படிப்பதில் இன்றைய தலைமுறை மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
புத்தக வாசிப்பு மிகச் சிறந்த பழக்கம். அதன் மூலம் சிறந்த சிந்தனையையும், அறிவாற்றலையும் பெற முடிவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். தினந்தோறும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சுமார் ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசிப்பதை நானும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை "பாடப் புத்தகங்களை படித்தாயா? என்று கேட்பது போல, "நூலகம் சென்று வந்தாயா?' என்ற கேட்டு, அக்குழந்தைகள் நூலகங்களுக்கு தொடர்ந்து சென்று வரும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் 148 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 2.08 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். புரவலர்களாக 2,465 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை கெüரவிக்க, அதிக செலவில் சால்வை அணிவிப்பதை தவிர்த்து, குறைந்த செலவில் நல்ல புத்தகங்களை பரிசாக தரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் முகமது ஜான்.
ஆட்சியர் பொ.சங்கர், துணை மேயர் வி.டி.தருமலிங்கம், மாவட்ட நூலக அலுவலர் து.சின்னத்தம்பி, மாவட்ட மைய நூலகர் பெ.முனுசாமி மற்றும் நூலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


