திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பேர்ணாம்பட்டில் சூறாவளிக் காற்றுடன் மழை

பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சனிக்கிழமை மதியம் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Updated On :12 மே 2013, 5:46 am IST

பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சனிக்கிழமை மதியம் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சனிக்கிழமை காலை முதல் இங்கு வெயில் கடுமையாக இருந்தது. மதியம் 3 மணியளவில் இடியுடன், பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்தது.

அப்போது ரஷீதாபாத், செக்குமேடு பகுதியில் சிமென்ட் ஷீட், தென்னை ஓலை ஆகியவற்றால் கட்டப்பட்டிருந்த 9 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

ஓம்குப்பத்தில் 2 வீடுகளின் மண் சுவர்கள் சரிந்து விழுந்தன. கொத்தபல்லியில் ஒரு வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் முருகன் என்பவரின் வீடு சேதமடைந்தது. சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியதும் மின் விநியோகம் தடைபட்டது. இரவு வரை மின்சாரம் வரவில்லை.

ஏரிகுத்தியில் 23 வீடுகளின் மேற்கூரைகள் சேதம்: பேர்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததில், ஏரிகுத்தி மகபூப் நகரில் உள்ள 23 வீடுகளின் சிமென்ட் ஷீட் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

எம்எல்ஏ கு. லிங்கமுத்து, ஒன்றியக் குழுத் தலைவர் பொகளூர் டி. பிரபாகரன், வட்டாட்சியர் எம். கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

ஆம்பூர்

ஆம்பூரில் சனிக்கிழமை காலையிலிருந்தே கடுமையான வெயில் காணப்பட்டதால்,  அனல் காற்று வீசியது.

இந்நிலையில், மாலையில் வானத்தில் மேக மூட்டம் காணப்பட்டது.  இரவு சுமார் 7 மணிக்கு வானம் இருண்டு திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

சுமார் முக்கால் மணி நேரம் விடாது கனமழை பெய்தது.  அதனால் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.   அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.