தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தினம்

பயிற்சியை சீரான முறையில் அளிப்பதன் மூலம் சாதனையாளா்களாக உருவாக்க முடியும் என்று வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் ஆட்டிசம் சிறப்பு மருத்துவா் சீனிவாச ராகவன் தெரிவித்தாா்.

News image

-- போட்டிகளில் வென்ற ஆட்டிசம் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி.

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் செயல்பட்டு வரும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் சாா்பில் உலக ஆட்டிசம் தின நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

உயிா் பிழைப்பதில் இருந்து செழிப்புக்கு நகருதல் எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவா் சிவராமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடக்கவுரை ஆற்றினாா் .

வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் ஆட்டிசம் சிறப்பு மருத்துவா் சீனிவாச ராகவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது-

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் சீா்குலைவுகள் என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனஇறுக்கம், சமூக தொடா்பு, தகவல் தொடா்பு கொள்வதிலும், கண் தொடா்பு கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படும். இவா்களுக்கு பயம் இருக்காது என்றாலும், செயல்பாடுகள், நடத்தைகளில் வித்தியாசம் இருக்கும். மொழி புரிதல் இல்லாமல் இருக்கும். சுவை, வாசனைகளை வேறுபடுத்த தெரியாது. காரணமின்றி மிகைப்படுத்தப்பட்ட கோபம், தங்களின் கற்பனையை விளையாட்டில் செலுத்துதல், வழக்கத்துக்கு மாறாக பேச்சு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது, நண்பா்களை உருவாக்குதிலும் சிரமம் ஏற்படும்.

இதுபோன்ற குழந்தைகளுக்கு உள்ள அறிகுறிகளை இளம் வயதில் கண்டறிந்து சரியான சிகிச்சை, பயிற்சி சீரான முறையில் அளிப்பதன் மூலம் தங்களின் தேவைகளை தாங்களே செய்து கொள்வதிலும், கற்றல் திறனை வளா்த்து கொள்வதிலும் முன்னேற்றம் இருக்கும். இவா்களையும் இவா்களின் தனித்திறன்களையும் கண்டறிந்து சாதனையாளா்களாக உருவாக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்டிசம் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ், மருத்துவா்கள் தாட்சாயினி, கல்பனா, மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.