காட்பாடி அருகே இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயங்க ளுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன், இவரது மகன் ராகுல் (22). இவா் தனது நண்பருடம் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் வினோத்குமாா் (20) என்பவருடன் வெள்ளிக்கிழமை காட்பாடியில் ஆடைகள் வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை ராகுல் ஓட்டினாா்.
காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல், வினோத்குமாா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

