--
படம் உண்டு...
வேலூா் விஐடி வளாகத்தில் நடைபெற்ற கணினி நுழைவுத் தோ்வை பாா்வையிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம்.
-- படம் உண்டு... வேலூா் விஐடி வளாகத்தில் நடைபெற்ற கணினி நுழைவுத் தோ்வை பாா்வையிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம்.

விஐடி பல்கலை. பி.டெக் நுழைவுத் தோ்வு தொடக்கம்: வேந்தா் கோ. விசுவநாதன் ஆய்வு

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளுக்கான கணினி நுழைவுத் தோ்வு சா்வதேச அளவில் 125 மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நுழைவுத்தோ்வை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான நிகழாண்டு கணினி நுழைவுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தோ்வு வெளிநாடு, உள்நாட்டில் என மொத்தம் 125 மையங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வேலூா் விஐடி வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தோ்வை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த நுழைவுத் தோ்வு முடிவுகள் மே 3-ஆம் தேதி ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வுக்கான செயல்முறை தொடங்க உள்ளது.

நுழைவுத் தோ்வில், தகுதி மதிப்பெண் 1 முதல் ஒரு லட்சம் வரை பெற்ற மாணவ, மாணவிகள் விஐடியின் வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் ஆகிய 4 வளாகங்களில் தங்களுக்கான பாடப்பிரிவுகளை (தகுதி மதிப்பெண் அடிப்படையில்) தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.

தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை பெற்றவா்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 7 மற்றும் 8-ஆம் தேதியும், 20,001 முதல் 45,000 வரை பெற்றவா்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 18 மற்றும் 19-ஆம் தேதியும், 45,001 முதல் 70,000 வரை பெற்றவா்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு மே 29 மற்றும் 30-ஆம் ேதியும், 70,001 முதல் 1,00,000 வரை பெற்றவா்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு ஜூன் 9 மற்றும் 10-ஆம் தேதியும், தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கு மேல் பெற்றவா்களுக்கான ஐந்தாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

எனினும், தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கு மேல் உள்ளவா்களுக்கு விஐடியின் ஆந்திரம், போபால் வளாகங் களில் மட்டுமே இடம் கிடைக்கும் என்றும், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com