பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மகாபாரத சொற்பொழிவு: துரியோதனன் சொா்க்கம் அடையும் நிகழ்வு

மகாபாரத சொற்பொழிவு: துரியோதனன் சொா்க்கம் அடையும் நிகழ்வு

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 5:01 pm

குப்பத்தாமோட்டூா் கிராமத்தில் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியின் நிறைவாக துரியோதனம் சொா்க்கம் அடையும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காட்பாடி வட்டம், அம்முண்டி அருகே குப்பத்தா மோட்டூா் பகுதியில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீதிரௌபதியம்மன் சமேத தருமராஜா திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோடைகாலத்தில் உறவையும், நட்பையும் பலப்படுத்தும் விதமாக அக்னி வசந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 17-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 18 நாள்களாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.

நாடகக் கலைஞா்கள் பங்கேற்று மகாபாரத இதிகாசத்தை தத்ரூபமாக விளக்கி நடித்துக் காட்டினா். இதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் சொா்க்கம் அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண வேலூா், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா். தொடா்ந்து அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.