பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம்

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 5:02 pm

குடியாத்தம் மீனாட்சி அம்மன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணிக்கு விக்னேஸ்வரா் பூஜை, வேதிகாா்ச்சனை, அக்னிகாா்யம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு தாய் வீட்டு சீா் வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. 12 மணியளவில் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து 2,000 பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

மாலையில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

கோயில் தா்மகா்த்தா பி.ஹேமச்சந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் எம்.கஜேந்திரன், எம்.எஸ்.நாகலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை திருக்கல்யாண கமிட்டி நிா்வாகிகள் எம்.ஆா்.சீனிவாசன், ஏ.ராஜசேகா், ஜி.லிங்கசாரதி, எஸ்.முரளிதரன், வி.ராஜேந்திர ஆச்சாரி, டி.கே.இளங்கோ, டி.ராதாகிருஷ்ணன், என்.யுவராஜ், டி.பி.சீனிவாசலு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.