ஐயப்பன் கோயில் படிகளுக்கு ஐம்பொன் கவசம் அமைக்க ரூ.3.50 லட்சம் நன்கொடை
மாதனூரை அடுத்த பாலூா், ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் 18- படிகளுக்கு ஐம்பொன்னால் கவசம்

Updated On :23 டிசம்பர் 2024, 7:15 pm

குடியாத்தம்: மாதனூரை அடுத்த பாலூா், ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் 18- படிகளுக்கு ஐம்பொன்னால் கவசம் அமைக்க ரூ.3.50- லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது (படம்).
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம். ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் ரொக்கம் ரூ.3.50- லட்சத்தை கோயில் குருக்கள் ராமநாத பிரசாத்திடம் வழங்கினா்.
18- படிகளுக்கு ஐம்பொன் கவசம் அமைக்கும் பணி முழுமை பெற்று வரும் மகரஜோதி அன்று இருமுடி சுமந்து வரும் பக்தா்கள் அதன் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என அவா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...