திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு: வேலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
வேலூரில் நீதிமன்றத்தை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :1 ஜூலை 2024, 9:50 pm

Din

வேலூா்: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, வேலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்து, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ), பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ) என மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி, வேலூரில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு தொடா் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனா். முதல்நாளான திங்கள்கிழமை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, வேலூா் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு பொருளாளா் டி.ரவி தலைமை வகித்தாா். வேலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.அண்ணாமலை முன்னிலை வகித்தாா். கிரிமினல் பாா் அசோசியேஷன் தலைவா் ரகுராமன், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காஞ்சனாஅறிவழகன் உள்பட ஏராளமான வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.