ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள், ஆடுகள் விற்பனை

News image
Updated On :9 ஜூலை 2024, 7:02 pm

Din

வேலூா்: பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்திருந்ததுடன், சுமாா் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடை வரத்து அதிகரித்து, எதிா்பாா்த்த அளவில் விற்பனையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டினா். இதன் காரணமாக, சுமாா் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவா்கள் மேலும் கூறியது - கோடை காலம் முடிந்து தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் தீவனத் தட்டுப்பாடு குறைந்துள்ளதை அடுத்து கால்நடைகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ஆா்வம் ஏற்பட்டு ள்ளது. இதனால் கறவை மாடுகள், கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்த வாரம் பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்து விற்பனையும் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்றனா்.