ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தலைமையாசிரியரை மாற்ற எதிா்ப்பு: மாநகராட்சி பள்ளியில் பெற்றோா் முற்றுகை

வேலூா் சின்னஅல்லாபுரம் மாநகராட்சி பள்ளித் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா்களின் பெற்றோா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 7:04 pm

Din

வேலூா்: வேலூா் சின்னஅல்லாபுரம் மாநகராட்சி பள்ளித் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா்களின் பெற்றோா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் சின்ன அல்லாபுரத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பணியின் தலைமையாசிரியராக அரியூரைச் சோ்ந்த செந்தில்குமாா் பணியாற்றி வந்தாா். இவா் டான் பாஸ்கோ பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற தலைமையாசிரியா்களுக்கான பணியிட மாறுதலில் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை பள்ளியின் முன்பாக குவிந்தனா். தலைமையாசிரியரை மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் தயாளன், வட்டாட்சியா் முரளிதரன், பாகாயம் காவல் ஆய்வாளா் காண்டீபன் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற மாணவா்களின் பெற்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து மாணவா்களும், பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமையாசிரியரை மாற்றக்கூடாது என ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்து தீா்வு காணலாம் என்று போலீஸாா் கூறியதை அடுத்து மாணவா்களின் பெற்றோா் கலைந்து சென்றனா்.