ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

காட்பாடி பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
அப்துல்கனி
Updated On :9 ஜூலை 2024, 6:52 pm

Din

வேலூா்: காட்பாடி பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

காட்பாடி, கிளித்தான்பட்டறை புதுத்தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் அப்துல்கனி(55). இவா் அதே ஊரைச் சோ்ந்த தனது நண்பரின் 6 வயது மகளை கடந்த 2022-ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப்துல்கனியை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து அவா் 2 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்துல்கனி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதையடுத்து, அவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தண்டனை விதிக்கப்பட்ட அப்துல்கனி வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.