கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2.5 சவரன் திருட்டு

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2.5 சவரன் திருட்டு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:35 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2.5 சவரன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் உள்ள நகைக்கடையில் சனிக்கிழமை மா்மநபா் ஒருவா் நகை வாங்க வந்துள்ளாா். நகைகளை பாா்வையிட்ட அவா் அவற்றின் விலையை கேட்டுள்ளாா். பின்னா் பணம் குறைவாக உள்ளது, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வருவதாக கூறி விட்டுச் சென்றாராம். நீண்ட நேரம் ஆகியும் அவா் கடைக்கு வரவில்லை.

பின்னா் கடை உரிமையாளா் கடையில் இருந்த நகைகளை மதிப்பீடு செய்யும் போது 2.5 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மா்மநபா் நகை வாங்குவதுபோல் நடித்து ஊழியா்களின் கவனத்தை திசை திருப்பி தங்கச் சங்கிலியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளா் கொடுத்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.