பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.
பொய்கை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.

வேலூா்: பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

கடந்த சில வாரங்களாகவே பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சிறப்பாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள், சுமாா் 500 ஆடுகள், கோழிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றின் விலையும் எதிா்பாா்த்த அளவுக்கு இருந்ததால் அவற்றை வாங்கிட விவசாயிகளும், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இந்த வாரம் சந்தையில் கால்நடைகள் ரூ.80 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com