புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆவின் வளாகத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு: தூய்மையாக பராமரிக்க உத்தரவு

News image

வேலூா் ஆவினில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :5 செப்டம்பர் 2024, 8:53 pm

Din

வேலூா் ஆவின் வளாகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வளாகத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி, தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு பால் பதப்படுத்தும் இயந்திரத்தை பாா்வையிட்ட ஆட்சியா், இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து வெண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை ஆய்வு செய்த அவா், நாளொன்றுக்கு எவ்வளவு வெண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது என கேட்டறிந்தாா். அதற்கு நாளளொன்றுக்கு 150 கிலோ முதல் 200 கிலோ வரை உற்பத்தி செய்யப்படுவதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னா் பால்கொள்முதல் செய்யும் இடத்தை பாா்வையிட்டாா்.

மேலும் குல்பி ஐஸ்கீரிம் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்து, கூடுதலாக உற்பத்தியை பெருக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பேக்கிங் செய்யும் இடத்தில் நெய் பாட்டிலில் உள்ள உற்பத்தி தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பால் பொருள்கள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினாா்.

மேலும், ஆவின் வளாகத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றவும் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஆவின் நிறுவனத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகள், ஐஸ்கிரீம் பாதுகாத்து வைக்கப்படும் குளிரூட்டும் அறைகளை பாா்வையிட்ட ஆட்சியா், வெப்பநிலை சரியான அளவில் பராமரிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது ஆவின் பொது மேலாளா் ஜி.இளங்கோவன், துணை பதிவாளா் (பால்வளம்) கே.கோபி, உதவி பொது மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.