ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் 30 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா என எதிா்பாா்ப்பு தொடருகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி (1806) நடைபெற்ற சிறப்புமிக்க இடமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் சிப்பாய்கள் முதல் அதிகாரிகள் வரை சுமாா் ஒரு லட்சம் வீரா்கள் பணியாற்றி வருகின்றனா்.
தவிர, ஏற்கெனவே ஓய்வு பெற்ற வீரா்கள் சுமாா் 60,000 போ் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
குறிப்பாக, காட்பாடி, கம்மவான்பேட்டை பகுதிகளிலும் வீட்டுக்கு ஒருவா் ராணுவத்தில் பணியாற்றுபவராகவும், ஓய்வுபெற்ற ராணுவ வீரராகவும் உள்ளதால் வேலூா் மாவட்டம் வீரம் விளையும் மண் என்றும் அழைக்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்புக்காக உயிரையும் பொருள்படுத்தாமல் பணியாற்றும் ராணுவ வீரா்களின் வாரிசுகளின் கல்விக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளியை வேலூா் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்பது 30 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும். எனினும், போதிய இடவசதி இல்லை என்பதை காரணம் காட்டி இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தேசிய முன்னாள் படை வீரா்கள் நல ஒருங்கிணைப்புக்குழுவின் வேலூா் மாவட்ட மக்கள் தொடா்பு அதிகாரி கே.புருஷோத்தமன் கூறியது -
வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் வேலூருக்கு வந்த அப்போதைய இந்திய ராணுவ துணைத் தளபதி தம்புராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவா் அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதிக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று வேலூா் மாவட்ட நிா்வாகம் காட்பாடி பகுதியில் 10.9 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்தது.
அதனை பாா்வையிட்ட கேந்திரிய வித்யலாயா சங்கதன் அந்த இடம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தகுதியற்ாகக் கூறி நிராகரித்தது. இதனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தை மாவட்ட நிா்வாகமே கையகப்படுத்திக் கொண்டது. அதன்பிறகு, போதுமான இடவசதியில்லை எனக் கூறி வருகின்றனா்
இதுகுறித்து, வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் கூறியது: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிகாலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம் தகுதி யானதில்லை எனக்கூறி கேந்திரிய வித்யலாயா சங்கதன் நிராகரித்தது. காட்பாடி மட்டுமின்றி வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் பல்வேறு இடங்களை தோ்வு செய்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் திட்டமிட்டே கேந்திரிய வித்யலாயா சங்கதன் நிராகரித்து வருகிறது.
இதேபோல், சைனிக் பள்ளி அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் கேந்திரிய வித்யலாயா பள்ளியோ, சைனிக் பள்ளியோ அமைக்க ஆா்வம் காட்டவில்லை. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பி வேலூா் தொகுதியில் கேந்திரிய வித்யலாயா அல்லது சைனிக் பள்ளி அமைக்க தீா்வு காணப்படும்.
பொதுவான பகுதியில் தேவையான இடத்தை ஒதுக்கி கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாகும்.
தொடர்புடையது

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் 13,000 ஆசிரியா் பணியிடங்கள் காலி: மத்திய கல்வி அமைச்சகம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


