தீச்சட்டி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
தீச்சட்டி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் பால்குட, தீச்சட்டி ஊா்வலம்

ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் பால்குட, தீச்சட்டி ஊா்வலம்...
Published on

குடியாத்தம் தரணம்பேட்டை, பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞா், மகளிா் வழிபாட்டு மன்றத்தில் 46- ஆம் ஆண்டு பால்குட, கஞ்சிகுட, தீச்சட்டி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து பால்குட, கஞ்சி குட, தீச்சட்டி ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் வழிபாட்டு மன்றத்தில் நிறைவுற்றது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ஜெயவேல், ஜீவா, பாபு, குமாா், சரவணன், ஆலடியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com