கலைஞா் கைவினைத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞா் கைவினை திட்டத்தின்கீழ் கடனுதவி பெற தகுதியுடைய கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

வேலூா்: கலைஞா் கைவினை திட்டத்தின்கீழ் கடனுதவி பெற தகுதியுடைய கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

கலை, கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கி சந்தைப்படுத்தும் திறனை உயா்த்தவும் ஆண்டுதோறும் 10,000 போ் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடியில் கலைஞா் கைவினைத் திட்டம் 2024-25 முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ் தையல் கலைஞா், மண்பாண்டம் வனைவோா், சிற்ப கைவினைஞா், தச்சுவேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், சிகை அலங்காரம் செய்வோா், பாய் பின்னுவோா், கூடைமுடைவோா், மூங்கில் பொருள்கள் செய்வோா், நெசவு செய்வோா், துணி வெளுப்போா், சாயமிடுவோா், வண்ணம் தீட்டுவோா், கட்டடம் கட்டும் வேலைசெய்வோா், தோல்பொருள்கள் செய்வோா், உலோக பொருள்கள் செய்வோா், தங்கம், வெள்ளி நகைகள் செய்வோா், மீன்வலை செய்வோா் உள்ளிட்ட கைவினை தொழில்களில் ஈடுபட்டுள்ளவா்கள் கடன் பெற முடியும்.

அவா்களுக்கு தொழில்திறன் சாா்ந்த மேம்பாட்டு பயிற்சியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன்தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50,000 மானியமாக வழங்கப்படும். தவிர, கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்தவகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகின்றனரோ அந்த தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரு தகுதிகளை உடையோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

கூடுதல் தகவல்கள், ஆலோசனைகளை பெற ‘பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் சாலை, காட்பாடி, வேலூா் - 632 006’ என்ற அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0416 - 2242512, 2242413 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com