தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வரத்து குறைந்தது: வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

வரத்து குறைவால் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

News image

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள்.

Updated On :17 மார்ச் 2025, 6:20 am IST

வரத்து குறைவால் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். வேலூா் மீன் மாா்க்கெட்டில் உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகை, கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம், கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம், மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

வேலூா் மீன் மாா்க்கெட்டில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் மீன்கள் மொத்த வியாபாரமும், காலை 5 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைந்திருந்ததால் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியது: வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை போன்றே ஞாயிற்றுக்கிழமையும் 5 லாரிகளில் மட்டுமே மீன்கள் வந்தன. இதனால், மீன்கள் விலை அதிகரித்தது.

வஞ்சிரம் 1 கிலோ ரூ.1,300, சின்ன வஞ்சிரம் ரூ.650, ஆயிலா ரூ.170, இறால் கிலோ ரூ.400, நண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.550, சங்கரா கிலோ ரூ.350, ஷீலா கிலோ ரூ.350, வெள்ளை கொடுவா ரூ.400, கண்ணாடி பாறை ரூ.450, விரால் ரூ.500, கடல் வவ்வா ரூ.750, அணை வவ்வா ரூ.180, சுறா ரூ.700, தேங்காய் பாறை ரூ.400, நெத்திலி ரூ.250, மத்தி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டன என்றனா். வரத்து குறைந்திருந்தபோதும், மீன்கள் வாங்க கூட்டம் அதிகளவில் இருந்ததைக் காணமுடிந்தது.