கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தற்கொலை

வேலூா் அருகே கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:36 am IST

வேலூா் அருகே கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், மூஞ்சூா்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாரதி. லாரி ஓட்டுநரான இவரது மனைவி சூரியகலா (எ) அருணா (36). சாரதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவும் சாரதி மது அருந்திவிட்டு வந்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த சூரியகலா கணவரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளாா்.

இதனிடையே திங்கள்கிழமை மீண்டும் சாரதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில், மனமுடைந்த சூரியகலா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா், சூரியகலாவின் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.