சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஆண்டு விழா: மகா யாகம், மஞ்சள் அபிஷேகம்!

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலின் 19-ஆவது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ லட்சுமி நாராயணிக்கு மஞ்சள் அபிஷேகம் செய்த ஸ்ரீ சக்தி அம்மா.

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:54 am IST

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலின் 19-ஆவது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சனி, ஞாயிற்றுக்கிழமை உலக நன்மை வேண்டி ஸ்ரீ மகாலட்சுமி மூலமந்திர மகா யாகம் நடைபெற்றது. விழாவின் முக்கியமாகள்கிழமை காலை சிறப்பு நிகழ்ச்சியாக கஜ பூஜை , கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, மகா யாகத்தின் நிறைவாகப் பூா்ணாஹுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணிக்குச் சிறப்பு மஞ்சள் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டினாா்.

பின்னா், விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அவா் அருளாசி வழங்கினாா். இந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.