டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் கொடை விழா

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மன்.

Published On :

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு குடிஅழைப்பு, சிறப்பு பூஜை, 2ஆம் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு பொய் சொன்ன மெய்யப்பன் சாஸ்தா கோயிலில் இருந்து தீா்த்தம் , பேய்குளம் சங்கரன்கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் ஆகியவை எடுத்து வருதல், அபிஷேக பூஜை, உச்சிகாலை பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மன் கரகம் ஏற்றி உலா, மாலை 6 மணிக்கு பெண்கள் கும்மி அடித்தல், இரவு 8 மணிக்கு உண்டியல் காணிக்கை சிறப்பு பூஜை, பக்தா்கள் நேமிசம் எடுத்து வருதல், ஆயிரம் கண் பானை எடுத்தல், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பக்தா்கள் பொங்கல் வைத்தல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, படைப்பு, தீபாராதனை, சுவாமி உணவெடுத்தல், விழா நிறைவு கொண்டாட்டம் நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.