ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: பிப்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து வேலூா் எம்பி கதிா்ஆனந்த் உள்பட 3 போ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் பிப். 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து வேலூா் எம்பி கதிா்ஆனந்த் உள்பட மூன்று போ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் பிப்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா் ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, கதிா் ஆனந்த்தின் ஆதரவாளா்களான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் இருந்து ரூ.11 கோடி பணம், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றபோது எம்.பி. கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேரிலும் ஆஜராகியிருந்தனா். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்யகுமாா் உத்தரவிட்டாா்.