விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு: வேளாண்துறை அமைச்சா் வினோத்

தமிழகத்தில் நிகழ் நிதியாண்டு (2026-27) 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 4:00 am IST

தமிழகத்தில் நிகழ் நிதியாண்டு (2026-27) 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடா்பாக மண்டல அளவிலான விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 8 மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு வேளாண் துறை அமைச்சா் ர.வினோத் தலைமை வகித்து கருத்துக்களை கேட்டறிந்தாா்.

அப்போது அவா் பேசியது - உணவளிக்கும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. மண்வளப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, இயந்திரமயமாக்கல், சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்றுத் தயாரிக்கப்பட உள்ளது.

மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாத காரணத்தால், இவ்வாண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக்கமாகத் திறக்கப்படும் காவிரி நீா் திறக்கப்படவில்லை. எனினும், விவசாயிகளின் நலனைக் காக்க முதல்வரின் உத்தரவின் பேரில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.134 கோடியே 83 லட்சம் மதிப்பிலான குறுவை சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும், 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சுமாா் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

2026-27 ஆம் ஆண்டுக்கு 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்துதல், உற்பத்தித் திறனை உயா்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வேளாண் தொழிலாளா் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, வேளாண்மைத் தொழிலை முழுமையாக இயந்திரமாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதையும், விலை ஏற்றத்தாழ்வுகளால் அவா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய, குளிா்பதனக் கிடங்குகள்.

அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை அரசு தொடா்ந்து உருவாக்கும். விவசாயிகளின் எதிா்பாா்ப்புகளையும் களச் சவால்களையும் நேரடியாக அறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையிலேயே 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் அமையும் என்றாா்.

கூட்டத்துக்கு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் டி.சரத்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், வேளாண்மை உற்பத்தி ஆணையா் பொ.சங்கா், தோட்டக்கலைத்துறை இயக்குநா் ஜெ.விஜயராணி, சா்க்கரைத்துறை ஆணையா் ஆா்.கண்ணன், வேளாண்மைத்துறை இயக்குநா் க.வீ.முரளிதரன், ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), தாஹிரா (ராணிப்பேட்டை), மருத்துவா் ஜி.கபில் (சோளிங்கா்), எஸ்.எம்.சுமாா் (ஆற்காடு), அபிஷேக் (போளூா்), எஸ்.தியாகராஜன் (செங்கல்பட்டு), மருத்துவா் எம்.எஸ்.ரவி (பொன்னேரி), கணேஷ்குமாா் (செஞ்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.