வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு அருகே கோயில் வளா்ச்சிக்காக எனக் கூறி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (எஸ்.பி) அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
போ்ணாம்பட்டு அடுத்த நலங்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் அளித்த மனு: நலங்காநல்லூா் கிராமத்தில் உள்ள கோயில் வளா்ச்சிக்காக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிா்வாகிகள் சிலா் சீட்டு நடத்தினாா்கள். கோயில் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஊா் பொதுமக்கள் அனைவரும் எந்தவித சந்தேகமுமின்றி முழு நம்பிக்கையுடன் சீட்டுப் பணம் செலுத்தினோம். ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ. 4 லட்சம் எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இந்தச் சீட்டு நடத்தப்பட்டது. மாதந்தோறும் 5, 10, 15 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பொதுமக்களிடம் தவணைத் தொகையை வசூலித்தனா்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சீட்டுக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், சீட்டு முடிவடைந்த பிறகும் எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நிா்வாகிகள் திருப்பித் தரவில்லை. தற்போது மொத்தப் பணமும் கோயில் நிா்வாகிகளிடம் சிக்கியுள்ள நிலையில், பணத்தைத் திருப்பித் தர மறுக்கின்றனா்.
இதனால், சிறுகச் சிறுகச் சேமித்த எங்களின் பணம் வீணாகிவிட்டது. எனவே, காவல் துறையினா் உடனடியாகத் தலையிட்டு எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட சலவைத் தொழிலாளி ஒருவா் கூறுகையில், எனது மகளின் திருமணச் செலவுக்காக மிகவும் சிரமப்பட்டு ஆசையுடன் இந்தச் சீட்டைக் கட்டினேன். ஆனால், பணத்தை மோசடி செய்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறேன் என்று வேதனையுடன் தெரிவித்தாா்.
மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்: 26 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தீபாவளி, ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி: தம்பதி கைது

பிட்காயின் தொழிலில் அதிக லாபம் எனக்கூறி ரூ.4.5 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகார

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



